உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோடு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல் 

ரோடு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல் 

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே சமத்துார் - பெத்தநாயக்கனுார் செல்லும் ரோட்டினை விவசாயிகள், பள்ளி மாணவர்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுப்பிப்பு பணிகளுக்காக ரோடுகள் தோண்டப்பட்டன. அதன் பின்னர் பணிகள் துவங்கப்படவில்லை.இதையடுத்து, பொதுமக்கள் கடந்த மாதம், சமத்துார் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ரோடு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்தனர். பின்னர், ரோட்டில் ஜல்லி கற்கள் பரப்பிவிடப்பட்டன.பொதுமக்கள் கூறுகையில், 'இந்த ரோட்டை சீரமைக்க கோரிக்கை விடுத்ததும், ஜல்லி கற்களை பரப்பி விட்டனர். பணிகள் மந்தமாக நடப்பதால், மக்கள் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டுநர்கள், விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இல்லையெனில், போராட்டங்களில் ஈடுபடுவோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ