மேலும் செய்திகள்
தற்கொலை செய்த பா.ஜ., தொண்டரின் மொபைல் போன் ஆய்வு
07-Apr-2025
கோவை; கோவை சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் வட்டார தடய அறிவியல் ஆய்வகம் அமைந்துள்ளது. இங்கு, காவல்துறை வழக்கு சார்ந்த பல்வேறு தடயங்களை, ஆய்வு செய்து முடிவுகள் வழங்கப்படுகின்றன.இந்த ஆய்வகத்திற்கு, கோவை, திருப்பூர். ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களை சேர்ந்த போலீசார், வழக்கு சார்ந்த பொருட்களை கொண்டு வந்து செல்கின்றனர். இதுபோன்று, வழக்கு சார்ந்த பொருட்களை கொண்டு வரும் போலீசார், அதிகாரிகள் உரிய சீருடையில் வரவேண்டும் எனவும், நீதிமன்றங்களில் இருந்து ஆய்வகத்திற்கு வழக்கு சார்ந்த பொருட்களை மாலை, 5:00 மணிக்கு மேல் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், வட்டார தடய அறிவியல் ஆய்வகபிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
07-Apr-2025