| ADDED : நவ 25, 2025 05:55 AM
கோவை: கூட்டுறவு சங்கங்களில், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, நாளை (26ம் தேதி) நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அழகிரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை, நேரடி நியமனம் வாயிலாக நிரப்புவதற்கான எழுத்து தேர்வு முடிவுகள், கடந்த 17ம் தேதி, கோவை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, நேர்முகத் தேர்வு நாளை, கே.கே.புதுார், ஆரோக்கியசாமி வீதியில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட உள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், தங்களுடைய நேர்முக தேர்வுக்கான அனுமதி சீட்டை http://www.drbcbe.inஎன்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.