மேலும் செய்திகள்
அரசு பஸ் கண்டக்டர் இறப்பு
31-Dec-2024
பொள்ளாச்சி, ; அரசு போக்குவரத்து கழகம், கோவை கோட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில், தற்காலிகமாக 148 டிரைவர்கள் மற்றும் 245கண்டக்டர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர்.அரசு போக்குவரத்து கழகம், கோவை கோட்டத்தில், கோவை, ஊட்டி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய நான்கு மண்டலங்கள் உள்ளன. இங்கு, 'பர்ஸ்ட் அண்டு பெஸ்ட் சர்வீஸஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்' வாயிலாக, ஒப்பந்த அடிப்படையில், தற்காலிகமாக 148 டிரைவர்கள், 245 கண்டக்டர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அவ்வகையில், ஒரு ஷிப்டுக்கு, (8 மணி நேரப்பணி) ஜி.எஸ்.டி., நீங்கலாக டிரைவருக்கு 1,041 ரூபாயும், கண்டக்டருக்கு 1,030 ரூபாயும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, இன்று (24ம் தேதி), 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில், கோவை விஜய்பார்க்இன் ஓட்டலில், நேர்காணல் நடத்தப்படவும் உள்ளது.அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், திரும்ப பெறக்கூடிய வைப்புத் தொகை டி.டி., மற்றும் 'கன்சல்டன்சி ரெக்ரூட்மெண்ட்' வாயிலாக செலுத்த வேண்டும். இதேபோல, தேர்வு செய்யப்படும் டிரைவர், கண்டக்டருக்கு, அவரவர் வங்கி கணக்கில், மாத ஊதியம் செலுத்தப்படும்.தேர்வு செய்யப்படுவோர் ஒரு ஆண்டுக்கு, தொடர்ந்து பணி புரியலாம். இடை நிறுத்தம் செய்யப்பட மாட்டாது. முதலில் வருபவர்களுக்கும், அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் பணி புரிந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு, கூறினர்.
31-Dec-2024