கோவை: முதுமையில் மகிழ்வாக வசிக்க, குத்தகை அடிப்படையில் 'அத்வயா' எனும் பெயரில் வீடுகளை, நிவாசன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் துவக்கியுள்ளது. நிறுவனத்தின் இயக்குனர்கள் சீனிவாசன், வித்யா, அஸ்வின் துவாரகேஷ் கூறியதாவது: முதுமையில் மகிழ்வாக வாழ வசதியாக, முதியோருக்கென 52 வீடுகளை அடுக்குமாடி குடியிருப்பாகவும், 18 தனி வீடுகளாகவும் அமைத்துள்ளோம். இந்த வீடுகளில் முதியவர்கள் தனியாகவோ, இருவராகவோ வசிக்க முடியும். கிச்சன், பாத்ரூம், டிவி, நாற்காலிகள், டீபாய், படுக்கையறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. முதியோருக்கென திட்டமிடப்பட்ட சைவ உணவு வழங்குகிறோம். இந்த வீடுகளில் ஆறு மாதம் முதல் ஆண்டு கணக்குகளில், குத்தகை அடிப்படையில் குடியிருக்கலாம். குறைந்தபட்சம் 35 லட்சம் ரூபாய் குத்தகை அடிப்படையிலும், மாதாந்திர கட்டணமாக 35 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உடல், மன நலம் பெற யோகா, தியானம் பயிற்சிகள், பொழுதுபோக்கு அரங்கு, புத்தகங்கள், விளையாட்டுகள், நடைபாதை பூங்கா வசதிகள் உள்ளன. மருத்துவ உதவிக்கு, பி.எஸ்.ஜி., மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுகிறோம். அவசர உதவிக்கு செவிலியர் ஒருவர் பணியில் இருப்பார். குறைந்தபட்சம் 55 வயதுக்கு மேற்பட்டோர் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தார்.