| ADDED : ஜன 14, 2024 11:20 PM
அன்னுார்;நல்ல கவுண்டம்பாளையத்தில் நாளை தமிழ் சங்க விழா நடக்கிறது.நல்ல கவுண்டம்பாளையம், பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில், நாளை காலை 10:00 மணிக்கு பொங்கல் விழா, திருவள்ளுவர் தினம் உட்பட முப்பெரும் விழா நடக்கிறது. கயிறு இழுத்தல், உறியடித்தல் ஆகிய போட்டிகள் நடக்கின்றன. வள்ளலார் ஜோதி ஏற்றப்படுகிறது. முதன்மை கல்வி முன்னாள் அலுவலர் நாராயணசாமி தலைமை வகிக்கிறார். குருஜி சிவாத்மா அருளுரை வழங்குகிறார். சென்னை அரசு கலைக் கல்லுாரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகிறார். 'கம்பன் காதையில் மனம் கவர்ந்தது' என்னும் தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது.பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற, நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். கவையன்புத்துார் தமிழ் சங்கம், கோவை சோதி மைய அறக்கட்டளை, தொல்காப்பியர் தமிழ் சங்கமம் ஆகிய அமைப்புகள் இணைந்து விழாவை ஏற்பாடு செய்துள்ளன.