உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சீறிப்பாயுது குதிரை ஜீவிகாவுக்கு அது குழந்தை

சீறிப்பாயுது குதிரை ஜீவிகாவுக்கு அது குழந்தை

'சலோ மாயா!'ங்கற குரல் கேட்டதும் படுத்திருந்த குதிரை, விர்ரென எழுந்து தேகம் சிலிர்க்க ஒரே பாய்ச்சலில் பாய்ந்து வந்து நிற்க, சினிமா ஹீரோ ஸ்டைலில் தாவியேறி அதன் முதுகில் அமர்ந்து ஒரு ரவுண்ட் வந்தார் ஜீவிகா.கோவை, சத்தியமங்கலம் ரோடு பகுதியைச் சேர்ந்த இவர், ஐ.டி., நிறுவன ஊழியர். ஒய்யாரமாய்ஒரு சவாரி செய்துவிட்டு, அசால்ட்டாய் எட்டி குதித்து கீழே இறங்கிய அவர் கூறியதாவது:என் தாத்தா, அப்பா எல்லாருமே குதிரை வளர்த்துருக்காங்க. எனக்கும் குதிரை வளர்ப்பில் ஆர்வம். ஆறாவது படிக்கும் போது, அப்பா லோகநாதன் தான் குதிரையில ரைடு போறதுக்கு சொல்லிக்கொடுத்தார். நான் பத்தாவது படிக்கும் போது, மாயா (குதிரை) எங்க வீட்டுக்கு வாங்கிட்டு வந்தாங்க. உத்தரபிரதேச மாநிலத்துல இருந்து வந்ததால ஹிந்தில பேசுனா உடனே ரியாக்ட் பண்ணும். மியூசிக் ஏத்தமாதிரி நல்லா டான்ஸ் ஆடும். கூட்டத்தை பாத்தா மாயா கையில பிடிக்க முடியாத அளவுக்கு, ஹாப்பியாகிடும்.மியூசிக் போட்டதும் டான்ஸ் ஆடுற மாயா, அது மேல ஏறி, சலோன்னு சொன்னா ரைடுக்கு தயாராகிடும். சலோன்னா ஸ்பீடாவும், 'பஸ்'னா பொறுமையாவும் ஓடனுங்கிறது, மாயாவோட 'கோட் வேர்டு'. குழந்தை மாதிரி க்யூட்டா ரியாக்ட் பண்ற மாயாவுக்கு, இப்போ ஒன்பது வயசு. என்னோட பேமிலியில ஒருத்தியா தான் இத ட்ரீட் பண்ணுவேன், என்றார்.மாயான்னு ஏன் பேரு வச்சீங்கன்னு கேட்டதும்,'' ராஜஸ்தான் மாநிலத்தில், குதிரை பந்தய போட்டியில் வெற்றி பெற்ற போது, உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி பரிசு கொடுத்தாங்க. அவங்க நினைவா, இதுக்கு மாயான்னு கூப்புடுறோம்,'' என்றார்.பேசிக்கொண்டு இருக்கும் போதே, 'ராஜாவுக்கு ராஜா நான்டா' ங்கற பாட்டை மொபைலில் ஒலிக்க விட்டதும், இரு கால்களையும் அந்தரத்தில் துாக்கியபடி, கனைத்து கொண்டே ஸ்டெப் போட ஆரம்பித்துவிட்டது!சரிதான், இவங்க ஹார்ஸ்ல வேலைக்கு போனா, ஐ.டி., நிறுவன ஆபீஸ் வளாகத்துல 'பார்க்கிங்' பிரச்னை வந்துடாதா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை