உள்ளூர் செய்திகள்

ஜெ., பிறந்த நாள் விழா

கோவை;மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா, கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், ஜெயராம், முன்னாள் மேயர் வேலுசாமி, இன்ஜினியர் சந்திரசேகர், ஜெ., பேரவை செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர், கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா சிலைகளுக்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதய தெய்வம் மாளிகையில் நடந்த விழாவில், ஜெ., பேரவை சார்பில் மூத்த நிர்வாகிகளுக்கு, நிதியுதவி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை