உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.கே. நாயுடு பள்ளியில் விளையாட்டு தின விழா

கே.கே. நாயுடு பள்ளியில் விளையாட்டு தின விழா

கோவை:கே.கே. நாயுடு பள்ளியின் விளையாட்டு தின விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன. ஜி.வி.டி., அறக்கட்டளையின் கீழ் இயங்கும், கே. கே நாயுடு மேல்நிலைப்பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) விளையாட்டு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிநடந்தது. பள்ளியின் செயலாளர் கிருஷ்ணவேணி, ஜி.வி.டி., அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுதர்ஷினி, அறங்காவலர் சத்திய நாராயணன் ஆகியோர் விளையாட்டு விழாவை துவக்கி வைத்தனர். மாணவ மாணவியருக்கு 100மீ., 200மீ., 400மீ., 3000மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர்ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகையையும், மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ