உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேட் வால்வு குழி மூடல்

கேட் வால்வு குழி மூடல்

அன்னூர் : விபத்து ஏற்படுத்திய 'கேட் வால்வு' குழி, தினமலர் செய்தி எதிரொலியால் நேற்று மூடப்பட்டது.அன்னூர் தென்னம்பாளையம் ரோட்டில் தபால் அலுவலகம் முன், குடிநீர் மெயின் குழாய்க்கான 'கேட் வால்வு' தொட்டி ஆறு மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. தொட்டியின் மேல்பகுதியில் சிமென்ட் பலகை அமைக்கவில்லை. திறந்த நிலையில் இருந்த மூன்றடி ஆழமுள்ள தொட்டியால் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இது குறித்து ஆக. 16ம் தேதி 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. உடனடியாக, அங்கு சென்ற குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அந்த தொட்டியை சிமென்ட் பலகை போட்டு மூடினர். பல மாத கோரிக்கை நிறைவேறியதால் தென்னம்பாளையம் ரோடு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை