உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாலாங்குளத்தில் கழிவுகள் கலப்பு

வாலாங்குளத்தில் கழிவுகள் கலப்பு

கோவை : கோவை, வாலாங்குள கரையோரங்களில் தினமும் இரவு, ஆங்காங்கே சில செப்டிங் டேங்க் லாரிகள் நிறுத்தப்பட்டு, வாகனத்திலிருந்து பைப் மூலம் செப்டிங்டேங்க் கழிவுகள் குளத்தில் கலக்கப்படுகின்றன.கோவை மாநகராட்சியில் 8 குளங்கள் மற்றும் ஒரத்துப்பாளையம் வரையிலுள்ள 23 குளங்கள் உள்ளன. இதுதவிர ஏராளமான கண்மாய்கள், குட்டைகள் அனைத்துக்கும் நொய்யல் நதியே நீராதாரமாக உள்ளது. இந்த நொய்யல் நதி பேரூரைத் தாண்டியதும், சாயப்பட்டறைகள் கழிவுகள், சாக்கடைகள், ஆலைக் கழிவுகள் அனைத்தையும் சுமக்கும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது.நகரின் மொத்த கழிவுகளும் எவ்வித சுத்திகரிப்புமின்றி நேரடியாக நொய்யல் நதி மற்றும் குளங்களில் கலப்பதால், கோவையின் நீராதாரங்கள் முழுக்க மாசடைந்துவிட்டன. சமீபத்தில், கோவை வாலாங்குளத்தில் இருந்து நீர் மாதிரியை எடுத்து ஆய்வு செய்த சிறுதுளி அமைப்பு, அதில், மிகவும் மாசடைந்த நீரில் மட்டுமே வாழுகிற 'இகோலி' என்னும் பாக்டீரியா இருப்பதை கண்டறிந்தது. இது கேன்சர் உள்ளிட்ட அபாயகரமான நோய்களை பரப்பும் தன்மை கொண்டது.கோவையின் மக்கள் தொகை, நகர பரப்பு, தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் அபரிமிதமான வளர்ச்சியால், குளங்களில் கலக்கும் கழிவுகள் அதிகரித்துள்ள நிலையில், நாளுக்கு நாள் வாலாங்குளத்தில் ஒரு சில செப்டிக் டேங்க் லாரிகள், கழிவுகளை பகிரங்கமாக கொட்டுவதால் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை