உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரங்கநாத பெருமாள் கோவிலில் கூடார வள்ளி சிறப்பு பூஜை 

ரங்கநாத பெருமாள் கோவிலில் கூடார வள்ளி சிறப்பு பூஜை 

ஆனைமலை:ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில் கூடாரவள்ளி சிறப்பு பூஜை நடந்தது.மார்கழி மாதத்தில், இறைவனை நினைத்து ஆண்டாள் விரதத்தை நிறைவு செய்யும் நாளே, கூடார வள்ளி சிறப்பு நிகழ்வாக பூஜிக்கப்படுகிறது. ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், கூடார வள்ளி சிறப்பு பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு, பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிேஷக வழிபாடு நடந்தது. சம்பங்கி, துளசி, செவ்வந்தி, அரளி, மல்லிப்பூ, நந்தியாவட்டம், முல்லை, தாமரை உள்ளிட்ட ஒன்பது வகையான மலர்களால் அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை