உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐயப்ப சுவாமி கோவிலில் கும்பாபிேஷக பணி தீவிரம்

ஐயப்ப சுவாமி கோவிலில் கும்பாபிேஷக பணி தீவிரம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில் கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, யாக சாலைக்கான பணிகள் நடைபெறுகின்றன.பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிேஷக விழா நடத்த திட்டமிட்டு கடந்த, மூன்று ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.அதில், மஞ்சள் அம்மன், சிவபெருமான், ராமபிரான், அஷ்டலட்சுமி, காலபைரவர், ஆஞ்சநேயர் சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கோபுரங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தற்போது, வர்ணம் அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், யாகசாலை அமைப்பதற்காக நேற்று முன்தினம் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. அதில், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், முக்கிய நிர்வாகிகள், திருப்பணிக்குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.கோவிலில் கும்பாபிேஷக விழா, வரும் மார்ச் மாதம், 20ம் தேதி காலை, 9:25 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் நடக்கிறது. இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, யாக சாலையில், 55 யாக குண்டங்கள் அமைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை