உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வன்னிகுமார சுவாமி கோவிலில் வரும் 24ல் கும்பாபிஷேகம்

வன்னிகுமார சுவாமி கோவிலில் வரும் 24ல் கும்பாபிஷேகம்

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, நெ.10. முத்துார் வன்னிகுமார சுவாமி கோவிலில், வரும் 24ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.கிணத்துக்கடவு அருகே, நெ.10., முத்துாரில், பிரசித்தி பெற்ற வன்னிகுமார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, கோவிந்தாபுரம், பகவதிபாளையம், 10 முத்துார், தேவராயபுரம், கிணத்துக்கடவு பகுதி மக்கள் வந்து, தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வழிபடுகின்றனர்.இக்கோவிலில், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, கும்பாபிேஷக விழா நிகழ்ச்சிகள் வரும் 21ம் தேதி, மங்கள இசை மற்றும் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.வரும் 22ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, வேத பாராயணம், திருமுறை பாராயணம், கோ - பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வஜனம், கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவ கிரஹா ஹோமம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.மதியம், 12:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தீபாராதனை போன்றவை இடம்பெறுகிறது. மாலை, 5:00 மணிக்கு, அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், முதல் கால யாகம் போன்றவை நடக்கிறது.23ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, வேதிகார்ச்சனை மற்றும் இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை, ஆச்சார்ய வர்ணம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.24ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தீபாராதனை, கடம் புறப்பாடும், காலை, 9:00 மணிக்கு, விமான கோபுர கும்பாபிஷேகம் மற்றும் வன்னி குமார சுவாமி மூலாலய மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.இதற்கான ஏற்பாடுகளை, 10 முத்துார் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி