உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

வெள்ளையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் ஊராட்சியில் உள்ள வெள்ளையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா 19ம் தேதி, மங்கள இசையுடன் துவங்கியது. தொடர்ந்து, முதல் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி போன்ற நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம், இரண்டாம் கால யாக பூஜை, வேத பாராயணம், பிரசாதம் வழங்குதல், விமான கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மூன்றாம் கால யாக பூஜை, நவ சக்தி அர்ச்சனை, தீபாராதனை போன்ற நிகழ்ச்சி நடந்தது.நேற்று, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தீபாராதனை நடந்தது. பின், வெள்ளையம்மன் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, வெள்ளையம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தசதானம், தசதரிசனம், மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை