கால காலேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா
கோவில்பாளையம்: கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை நடந்தது. கொங்கு நாட்டு திருக்கடையூர் என்று அழைக்கப்படும், 1,300 ஆண்டுகள் பழமையான, கோவில்பாளையம், கால காலேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி விழா, கடந்த 11ம் தேதி நடந்தது. இதையடுத்து, நேற்றுமுன்தினம் காலை 9:00 மணிக்கு, லட்சார்ச்சனை துவங்கியது. சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. மதியம் 1:00 மணி வரையும், பின்னர், மாலை 4:00 மணிக்கு துவங்கி, இரவு 7:00 மணி வரையும், லட்சார்ச்சனை நடந்தது.