உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு 

பொள்ளாச்சி: ''தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு ரொம்ப மோசமாக உள்ளது,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.ஆனைமலையில், ஹிந்து முன்னணியின் மாவட்ட கார்யாலயம் திறப்பு விழா நடந்தது. இதில், பங்கேற்ற மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளது. கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன்பு, காங்., மாவட்ட தலைவர் கொலை, இரண்டு நாட்களுக்கு முன் அ.தி.மு.க., பிரமுகர் கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.தமிழகத்தில் உளவுத்துறை அதிகாரிகள் சரியில்லை; பயங்கரவாத செயல்கள் அரங்கேறும் அபாயம் உள்ளது. சத்தியமங்கலம், தேனி காடுகளில், பயிற்சி நடக்கிறது என கூறப்படுகிறது.கோவையில், ரகசிய அமைப்பு புதுசா துவங்கி, அடிக்கடி சந்திப்பதாக தகவல்கள் வருகின்றன. இதையெல்லாம் கண்காணிப்பு செய்ய வேண்டும்.உளவுத்துறையில் சரியான நபர்களை நியமிக்காவிட்டால், சட்ட விரோத செயல்களைதடுக்க முடியாத சூழல் ஏற்படும். பழைய குற்றவாளிகளின் நடமாட்டம், செயல்பாடுகளை போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு செய்ய வேண்டும்.கஞ்சா, போதை வஸ்துக்களால், பலர் பாதிக்கப்படுகின்றனர். இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

NAGARAJAN
ஜூலை 15, 2024 08:19

இவர்களுக்கு வேறு வேலையே கிடையாதோ. . அயோக்கிய சிகாமணிகள்


Kesavan
ஜூலை 09, 2024 09:32

நீங்க எல்லாம் அப்படியே உத்தரப்பிரதேசம் பீகார் அந்த மாதிரி இடத்துக்கு போயிடுங்க தமிழ்நாடு நன்றாக இருக்கும்


சாம்பு
ஜூலை 09, 2024 00:33

ஆந்திரா, உ.பி ந்னு போயிடுங்க.


NAGARAJAN
ஜூலை 08, 2024 09:27

இவர்களுக்கு இதே வேலையாக போய்விட்டது. . உருப்படியாக எதையும் செய்யவில்லை. . தயவுசெய்து தமிழகத்தை விட்டு கெட் அவுட்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை