உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்: மஞ்சப்பையை வரவேற்போம்!

பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்: மஞ்சப்பையை வரவேற்போம்!

ஆனைமலை;ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் கிட்டுச்சாமி மஞ்சப்பை வழங்கி பேசியதாவது:பிளாஸ்டிக் எளிதில் மக்குவதில்லை; விலங்குகள், மனிதர்கள் பறவைகள் போன்றவைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகள், நிலத்தில் புதைந்து மழைநீர் மண்ணில் சேராமல் தடுப்பதால், நிலத்தடி நீர்மட்டம் உயருவதில்லை.மேலும், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கால்நடைகள் போன்றவைகளின் உயிருக்கு பிளாஸ்டிக் ஆபத்தை விளைவிக்கிறது.எனவே, பிளாஸ்டிக்கை முழுமையாக தவிர்த்து, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்.மேலும், பாத்திரங்கள், மூங்கில் கூடைகள், காகிதக் கவர்கள், சணல் பொருட்கள் பயன்படுத்துவதன் வாயிலாக, எதிர்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வழங்க முடியும். எனவே, அனைவரும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.பள்ளியின் தேசிய பசுமைப்படை ஆசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை