மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் அசத்திய வீல்ஸ் மாரத்தான் போட்டி
9 minutes ago
வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி
18 minutes ago
இன்றைய மின்தடை
18 minutes ago
அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
19 minutes ago
காரமடை: காரமடை அருகே செயல்பட்டு வரும் பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு, சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். பரிசல் பயணம், ஆற்றில் குளித்து மகிழ்கின்றனர். காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பரளிக்காடு, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. காரமடை வனத்துறை சார்பில் பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், பழங்குடியின மக்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது . பரளிக்காடு வரும் சுற்றுலா பயணிகள், https://Coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக புக் செய்து கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்து தான் செல்ல வேண்டும். முன்பதிவு செய்யாமல் செல்லக்கூடாது. சுற்றுலா பயணிகளுக்கு பில்லூர் அணையில் பரிசல் பயணம், பழங்குடியின மக்கள் சார்பில் வழங்கப்படும் 10க்கும் மேற்பட்ட உணவு வகைகள், அத்திக்கடவு ஆற்றில் குளியல், பழங்குடியினர் நடனம் என, வனத்துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர். காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் புக்கிங் 100க்கு மேல் உள்ளது. பரளிக்காடு, பூச்சமரத்தூர், பில்லூர், நீராடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, 20க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டுநர்கள், 12க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் ஏராளமான பழங்குடியின மக்கள், இந்த சூழல் சுற்றுலாவால் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்,'' என்றார்.
9 minutes ago
18 minutes ago
18 minutes ago
19 minutes ago