மேலும் செய்திகள்
அழகு சாதனப்பொருட்கள் உரிமம் இன்றி தயாரிப்பு
07-Jul-2025
- நமது நிருபர் -'வீடுகளில் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்க உரிமம் பெறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என, மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.'வீடுகளில் ஒரு பகுதியாக சோப்பு, முகபவுடர், உதட்டு சாயம் ஆகிய அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கக்கூடாது; இதற்கென தனி இடம் இருக்க வேண்டும்.அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு தேதி, சேர்க்கப்பட்ட பொருட்களின் விபரம், முழு முகவரி, உரிமம் பற்றி தகவல்கள் இடம் பெற வேண்டும். முறையான அங்கீகாரம், உரிமம் பெறாமல், தங்கள் தயாரிப்பு குறித்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யக்கூடாது,' என, மருந்து கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கிறது.இருந்த போதும் உரிமம் பெறாமல் பலர், வீடுகளில் 'ேஹாம் மேட்', 'நேச்சுரல்' என பெயரிட்டு முக கிரீம், கண்மை, தலைமுடிக்கான பிரத்யேக எண்ணெய் தயாரிப்பதாக, சமூக வலைதளங்களில் பலர் விளம்பரம் செய்கின்றனர்.இவற்றை தடுக்க, மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் உரிய அனுமதியை பெற்றே அழகு சாதனப் பொருட்களை தயாரிக்க வேண்டும் என மருந்து கட்டுப்பாட்டுத்துறை எச்சரித்துள்ளது. பறிமுதல் செய்யப்படும்
கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:திருப்பூர் மாவட்டம் உள்பட கோவை மண்டலத்தில், தர, அங்கீகார நடைமுறையை பின்பற்றி, 37 மையங்கள் செயல்படுகின்றன.வீடுகளில் உரிமம் பெறாமல் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது, மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டத்தின் கீழ் சட்ட விரோதமாகும். வீடுகளில் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது, விற்பனை செய்யப்படுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் விதிகளை மீறி, அழகு சாதனப் பொருட்கள் தயாரித்தது கண்டறிப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறுவோர் வீடுகளில் இருந்து அழகு சாதனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.இவ்வாறு, தெரிவித்தார்.
07-Jul-2025