உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லோக்சபா தேர்தல் பணியில் அலட்சியம் கூடாது! வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அறிவுரை

லோக்சபா தேர்தல் பணியில் அலட்சியம் கூடாது! வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அறிவுரை

கோவை:'தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றுங்கள்; எவ்விதத்திலும் அலட்சியமாக இருக்கக்கூடாது' என, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சங்கர் அறிவுறுத்தினார்.வரும் லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான இறுதி வாக்காளர் பட்டியல், தமிழகம் முழுவதும் நாளை வெளியிடப்படுகிறது. கோவை மாவட்டத்துக்கான வாக்காளர் பட்டியல், கலெக்டர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், அன்றைய தினம் காலை 10:30 மணிக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் வெளியிடுகிறார்.இதுதொடர்பாக, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பார்வையாளரான, வேளாண் துறை செயலர் சங்கர், கோவை கலெக்டர் அலுவலகத்தில், துறை அலுவலர்களுடன் நேற்று ஆய்வு செய்தார். கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார்.இறுதி வாக்காளர் பட்டியல் அச்சடிக்கும் பணி, சென்னையில் நடந்து வருகிறது. நாளை (இன்று) இரவுக்குள் கோவை தருவிக்கப்பட்டு, அறிவித்தபடி, திங்கட்கிழமை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் எத்தனை சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன; அவை, எந்தெந்த லோக்சபா தொகுதிக்குள் வருகின்றன. புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் விபரம்; நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை விபரங்களை கேட்டறிந்தார்.இதுதொடர்பாக, தேர்தல் பிரிவினர் கூறியதாவது:ஏப்., இறுதியில் லோக்சபா தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றுங்கள். முந்தைய தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் பலருக்கும் இருக்கும்; அதை மனதில் நினைத்துக் கொண்டு அலட்சியமாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொன்றும் புதுமையாக இருக்கும்; கோட்டை விட்டு விடக்கூடாது.ஒற்றுமையாக பணியாற்றி, வாக்காளர் பட்டியலை சிறப்பாக தயாரித்திருப்பதை போல், தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அறிவுறுத்தினார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.மாநகராட்சி துணை கமிஷனர்கள் செல்வசுரபி, சிவக்குமார், கோட்டாட்சியர்கள் கோவிந்தன், பண்டரிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை