| ADDED : ஜன 24, 2024 09:20 PM
பொள்ளாச்சி -பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டியில் பழநி பாத யாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டி அனைத்து காலனி நண்பர்கள் இணைந்து நடத்தும், ஸ்ரீ ஓம் முருகா பழநி பாத யாத்திரை குழுவின் சார்பாக, 22ம் ஆண்டு பாத யாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடந்தது.நேற்றுமுன்தினம் காலை, உடுமலை தனியார் திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு வயலுார் திருமண மண்டபத்தில் உணவு வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.இன்று, பழநி முருகன் தரிசனம், காலை மற்றும் மதியம் பழநி குரும்பர் மடத்தில் அன்னதானம் நடக்கிறது. சேவாலயம் அறக்கட்டளை சார்பில், பழநிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி, சூளேஸ்வரன்பட்டி அழகப்பா காலனி கருப்பராயன் கோவில் அருகே நடந்தது.சேவாலயம் செயலாளர் ஞானசேகரன், நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார். சேவாலயம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.