உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நேஷனல் மாடல் பள்ளியில் மகா உற்சவம் உற்சாகம்

நேஷனல் மாடல் பள்ளியில் மகா உற்சவம் உற்சாகம்

கோவை:பீளமேடு, நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், 37வது ஆண்டு விழா, 'மகா உற்சவம்' என்ற பெயரில் கோலாகலமாக நடந்தது.சிறப்பு விருந்தினராக, கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் கலந்து கொண்டார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் அதிக மதிபெண் பெற்ற மாணவர்களுக்குவிருந்தினர், பரிசுகள், மற்றும் கல்வி உதவித்தொகையை வழங்கி கவுரவித்தார். பள்ளியில், 14 ஆண்டுகள் தொடர்ந்து படித்த மாணவர்களுக்கு, நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.விழாவில், மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.நேஷனல் மாடல் பள்ளிக் குழுமத்தின் தலைவர் மோகன் சந்தர், செயலாளர் உமா, முதல்வர்கள் பேபி, கீதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்