உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவோயிஸ்ட் தீபக் கோர்ட்டில் ஆஜர்

மாவோயிஸ்ட் தீபக் கோர்ட்டில் ஆஜர்

கோவை; தமிழக - கேரளா எல்லையில், அட்டப்பாடி பகுதியில், 2019 நவ., 9ல், கேரள அதிரடிபடைக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில், மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த மூன்று பேர் சுட்டு கொல்லப்பட்டனர். காயமடைந்த மாவோயிஸ்ட் தீபக் தப்பித்து, ஆனைகட்டி மலை பகுதியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார். கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் தீபக் மீது, வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடந்து வருகிறது. நேற்று விசாரணைக்கு வந்த போது, கேரளாவிலிருந்து தீபக்கை பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சாட்சி விசாரணையை, செப்., 2க்கு ஒத்திவைத்து நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை