சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான்
மேட்டுப்பாளையம்; காரமடையில் போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கோவை மாவட்டம் காரமடையில், காரமடை பிரண்ட்ஸ் கிளப் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் இதில் கலந்து கொண்டு, ஆர்.வி.கலையரங்கத்தில் துவங்கி காரமடை பஸ் ஸ்டாண்ட் மற்றும் வெள்ளியங்காடு சாலை வழியாக 1.5 கி.மீ., முதல் 5 கி.மீ., வரை மாரத்தான் ஓடினர். இப்போட்டியை மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், காரமடை நகராட்சி தலைவர் உஷா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். காரமடை பிரண்ட்ஸ் கிளப் தலைவர் சஞ்சீவ் காந்தி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. --