உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கணித பாடத்தேர்வு ஈஸினு சொல்லிட முடியாது! மாணவ, மாணவியர் கருத்து

கணித பாடத்தேர்வு ஈஸினு சொல்லிட முடியாது! மாணவ, மாணவியர் கருத்து

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 50 மையங்களில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. நேற்று, கணிதம் பாடத் தேர்வு நடந்தது.தேர்வு குறித்து, பொள்ளாச்சி, மகாலிங்கபுரம், ஏ.எம்.எஸ்., பள்ளி மாணவர்கள் கருத்து வருமாறு:லோகேஸ்வரன்: கணிதம் தேர்வு கடினமாக இருந்தது. எதிர்பார்க்கப்பட்ட வினாக்கள் இடம்பெறவில்லை. 5 மற்றும் 2 மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. இருப்பினும், முடிந்தவரை வினாக்களுக்கு பதில் எழுதியுள்ளேன். ஆசிரியரின் தொடர் பயிற்சியின் காரணமாக, தேர்வை விரைந்து எழுதினேன். அதிக மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.சிவானிகாஸ்ரீ: ஐந்து மதிப்பெண் கட்டாய வினா மட்டும் கடினமாக இருந்தது. அதேநேரம், இரண்டு மதிப்பெண் வினாக்கள், எளிதாக இருந்தன. தொடர் திருப்புதல் பயிற்சி மேற்கொண்டதால் கணிதம் தேர்வை பயமின்றி எதிர்கொண்டேன். நல்ல முறையில் தேர்வு எழுதி உள்ளேன். அதிக மதிப்பெண் எதிர்பார்க்கிறேன்.ஸ்ரீநிஷா: ஒரு மதிப்பெண் வினாக்களில் ஒன்றிரண்டு வினாக்கள் கடினமாக இருந்தன. எதிர்பார்த்த வினாக்கள் கேட்கப்படவில்லை. தேர்வுக்கு முன், நன்றாக பயிற்சி எடுத்திருந்ததால், முடிந்தவரை வினாக்களுக்கு பதில் எழுதியுள்ளேன். இருப்பினும், முழு மதிப்பெண் பெறுவது கடினம்.* வால்பாறை திருஇருதய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:அபிநயா: கணிதத்தேர்வை பொறுத்த வரை எதிர்பார்த்தது போல் ரொம்ப ஈசியாக இருந்தது. பயிற்சி எடுத்து படித்த பாடத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால், விடைகளை தெளிவாகவும், விரைவாகவும் எழுதியுள்ளேன். ஒரு சில வினாக்கள் கடினமாக இருந்தாலும், தெரிந்த வினாக்களுக்கான விடைகளை எழுதியுள்ளேன். அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.காளிமுத்து: கணித பாடத்தேர்வில், கஷ்டமான வினாக்கள் கேட்கப்படுமோ என அச்சத்தில் இருந்தேன். ஆனால், வினாத்தாளை வாங்கிய பின் மகிழ்ச்சியடைந்தேன். பள்ளியில் ஆசிரியர்கள் கற்பித்த பாடத்திலிருந்து தான் அதிக வினாக்கள் கேட்கப்பட்டன. தேர்வுக்காக சிறப்பு பயிற்சி எடுத்து படித்தேன். இதனால் தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன். நிச்சயம் சென்டம் வாங்கி விடுவேன்.* உடுமலை குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:தர்ஷினி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் இரண்டு தேர்வுகள் எளிமையாகவே இருந்ததால், கணித பாடத்தேர்வு கடினமாக வரும் என அச்சத்துடன் இருந்தேன். ஆனால், மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில் ஒரு வினா வித்தியாசமான முறையில் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அதுவும் வினாவை நன்றாக புரிந்துகொண்டதால் விடை எழுத முடிந்தது. சென்டம் அடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.நிகிதா: கணிதப் பாடத்தேர்வு கடினமாக இருக்குமோ என, பயந்தேன். ஆனால் தேர்வில் கேட்கப்பட்ட கணக்குகள் மிகவும் சுலபமானதாக இருந்தது. காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் அதிகம் இடம்பெற்றன. ஐந்து மதிப்பெண் கட்டாய வினாப்பகுதி சிறிது குழப்பும் வகையில் கேட்கப்பட்டிருந்தது. மற்ற பகுதிகள் அனைத்தும் எளிமையாக இருந்தன. - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ