உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறிச்சி, போத்தனுார் பகுதிகளில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா

குறிச்சி, போத்தனுார் பகுதிகளில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா

போத்தனூர் : மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.-, 108வது பிறந்த நாள் முன்னிட்டு, அ.தி.மு.க., வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.l குறிச்சி பகுதி அ.தி.மு.க.,சார்பில், மாச்சம்பாளையம், திருநகர், செங்கப்பா நகர், சுந்தராபுரம். அய்யர் ஹாஸ்பிட்டல், ஜி.கே.ஸ்கொயர் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி முன்னாள் தெற்கு மண்டல தலைவர் பெருமாள்சாமி, கட்சி கொடியினை ஏற்றி இனிப்பு வழங்கினார்.முன்னாள் நகரமைப்பு குழு தலைவர் செந்தில்குமார், வார்டு செயலாளர்கள் பாலகிருஷ்ணன், ஆனந்தன், பாபு, குமாரசாமி, ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்,l தினசரி மார்க்கெட்டில் நடந்த நிகழ்ச்சியில், கோவை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் கட்சி கொடியேற்றினார். குறிச்சி பகுதி செயலாளர் பெருமாள்சாமி மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.l போத்தனூர் பகுதி, 99வது டிவிஷன் எவரெஸ்ட் தொழிற்சாலையில், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பகுதி கழக செயலாளர் ரபீக் கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கினார். பாலு மற்றும் நிர்வாகிகள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ