உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுடன் நடை பயிற்சியில் ஈடுபட்ட அமைச்சர்

மாணவர்களுடன் நடை பயிற்சியில் ஈடுபட்ட அமைச்சர்

ஊட்டி:ஊட்டிக்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மருத்துவ கல்லுாரி மாணவர்களுடன் நடை பயிற்சியில் ஈடுபட்டார்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, குன்னுார், ஊட்டி மற்றும் கூடலுார் பகுதிகளில், மருத்துவமனையை திறந்து வைக்க, மாநில நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று முன்தினம் நீலகிரிக்கு வருகை தந்தார்.ஊட்டியில் தங்கி இருந்த அவர், நேற்று காலை ஊட்டி மருத்துவ கல்லுாரி மாணவர்களுடன், மாநில அரசின் 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற திட்டத்தின் கீழ், நடை பயிற்சியில் ஈடுபட்டார். ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து, இந்துநகர் வரை, 8 கி. மீ., நடைபயிற்சியில் ஈடுபட்டார்.அதில், பங்கேற்ற மாணவர்கள் கூறுகையில், 'நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ, மாநில அரசு நடப்போம் நலம் பெறுவோம் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவருடன் நடை பயிற்சியில் ஈடுபட்டது மகிழ்ச்சியாக இருந்தது,' என்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை