உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மொபைல் போன் பறிப்பு: இருவர் சிறையிலடைப்பு

 மொபைல் போன் பறிப்பு: இருவர் சிறையிலடைப்பு

கோவை: சேலம் மாவட்டம் லக்கம்பட்டியை சேர்ந்தவர், 21 வயது வாலிபர். சில தினங்களுக்கு முன், கோவை ஜீவா நகர் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூவர், மொபைல்போனை பறித்தனர். வாலிபர் சாய்பாபா காலனி போலீசாரிடம் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வாலிபர் சுப்பண்ணா வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது போனை பறித்து சென்றவர்கள் வந்தனர். வாலிபர் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து, போன் பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், துாத்துக்குடி மாவட்டம் புதுக்குடியை சேர்ந்த முத்துராஜ், 22, கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த நவீன், 26 மற்றும் இவர்களது நண்பர் விக்ரம் என தெரிந்தது. முத்துராஜ், நவீன் ஆகிய இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். தப்பிய விக்ரமை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ