உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அடமான சொத்து பத்திரம் மாயம்: ரூ.35 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

 அடமான சொத்து பத்திரம் மாயம்: ரூ.35 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

கோவை: வங்கியில் அடமானம் வைத்த சொத்தின் அசல் பத்திரம் மாயமானதால், 35 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. கோவை, சூலூர் அருகேயுள்ள வதம்பசேரி பகுதியை சேர்ந்தவர் நடராஜன், இவரது மனைவி சரஸ்வதி, மகன் தங்கராஜ், மகள் சாந்தி ஆகியோர் சேர்ந்து, வதம்பசேரி இந்தியன் வங்கியில், கடந்த 2006, பிப்., 22 ல், சொத்தை அடமானம் வைத்து கடன் பெற்றனர். இந்நிலையில், நடராஜன் இறந்ததை தொடர்ந்து, வங்கியில் பெற்ற கடனை தொகையை வட்டியுடன் சேர்த்து, 2023 ல் செலுத்தினர். இதனை ஏற்று வங்கியில் கடன் தொகை பெற்றதற்கான சான்றிதழ் கொடுத்தனர். அடமானம் வைத்த சொத்துபத்திரத்தை திருப்பி கேட்டு விண்ணப்பித்த போது காலதாமதம் செய்தனர். அதன்பிறகு,அசல் பத்திரம் தொலைந்துவிட்டதாகவும், போலீசில் புகார் அளிக்கப்பட்டு, கண்டுபிடிக்க முடியாத சான்றிதழ் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனாலும், வங்கி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நடராஜனின் வாரிசுதாரர்கள், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த ஆணைய தலைவர் தட்சணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் 'வங்கி நிர்வாகம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 35.90 லட்சம் ரூபாய், மனஉளைச்சலுக்கு ஒரு லட்சம் ரூபாய், வழக்கு செலவு, 20,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை