உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுகலான பாலத்தை விரிவுபடுத்த வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு

குறுகலான பாலத்தை விரிவுபடுத்த வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு

வால்பாறை:குறுகலான பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரில் இருந்து, கருமலை செல்லும் ரோட்டில் நடுமலை பாலம் உள்ளது. இதன் வழியாக, நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், ஒரே இடத்தில் இரு பிரிவாக உள்ள பாலம், மிகவும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்தும், உயிரிழப்பும் ஏற்படுகிறது.குறுகலான இந்த ரோட்டை விரிவுபடுத்த, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டுவதால், விபத்துக்கள் தொடர்கதையாக உள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறை நகரை ஒட்டியுள்ள ரோட்டில் அமைந்துள்ள, நடுமலை பாலத்தின் வழியாக நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.பாலத்தின் ஒரு பகுதி மிகவும் குறுகலாக உள்ளதால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்க முடியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.விபத்துக்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க, பாலத்தை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !