மேலும் செய்திகள்
'குபுகுபு' வாகனங்கள்
15-May-2025
போத்தனூர்; கோவை, சுந்தராபுரம் நான்கு சாலை சந்திப்பிலிருந்து சுமார், 50 மீட்டர் தொலைவில் பஸ் ஸ்டாப் உள்ளது. குறிச்சி நோக்கி செல்லும் பஸ்கள் அனைத்தும் இங்கு நின்று செல்லும். அதனருகே சில மரங்கள் சாலை ஓரத்தில் வளர்ந்துள்ளன.நேற்று மதியம் இங்குள்ள ஒரு மரம் சாலையில் சாய்ந்தது. இதனால் இவ்வழியே வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் சிலர், சாலையில் தடுப்பு வைத்து வாகனங்கள் சாலையின், வலதுபுறம் வரிசையாக செல்ல அறிவுறுத்தினர். தொடர்ந்து மரத்தின் கிளைகளையும், மரத்தையும் வெட்டி அகற்றினர்.இதையடுத்து, வாகனங்கள் வழக்கம்போல சென்றன.
15-May-2025