உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாடகை கட்டடத்தில் இயங்கும் அருங்காட்சியகம் நிதி வசதியின்மையால் தவிப்பு

வாடகை கட்டடத்தில் இயங்கும் அருங்காட்சியகம் நிதி வசதியின்மையால் தவிப்பு

கோவை,; கோவையின் மைய பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பல்நோக்கு அருங்காட்சியகம், தொல்பொருள் மற்றும் நாகரிக வளர்ச்சியின் முக்கிய பதிவுகளை, அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் முயற்சியில் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும், ஆள் பற்றாக்குறை மற்றும் நிதி வசதியின்மை காரணமாக, பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.கடந்த, 2019ம் ஆண்டில் நேரு விளையாட்டு அரங்கு வளாகத்தில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம், தரைதளத்தில், 2,000 சதுரடி மற்றும் முதல் தளத்தில், 1,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது. சங்க காலப் பொருட்கள், தொல்பொருள்கள், கல் சிற்பங்கள், மரச் சிற்பங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான நவீன நாகரிகத் தரவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பார்வையிடுகின்றனர். விடுமுறை நாட்களில் பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கிறது. கல்லுாரி மாணவர்களுக்கு கல்வெட்டு பயிற்சி, அரும்பொருள் பாதுகாப்பு, ஓலைச்சுவடி பராமரிப்பு ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டு, பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இச்சான்றிதழ் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற உதவுகிறது.அருங்காட்சியக கண்காணிப்பாளர் முருகவேல் கூறுகையில், ''ஆள் பற்றாக்குறை காரணமாக சில நேரங்களில் மற்றவர்களிடம் உதவி பெற வேண்டிய நிலை உருவாகிறது. பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய போக்கஸ் லைட்கள், குறிப்பு பலகைகள் போன்ற வசதிகளை செய்ய, நிதி ஒதுக்கீட்டுக்காக முறையிட்டுள்ளோம். தற்போது வரை வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது; விரைவில் தீர்வு வரும் என நம்புகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை