உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடுகளில் கொடி ஏற்ற மாணவர்களுக்கு தேசியக்கொடி

வீடுகளில் கொடி ஏற்ற மாணவர்களுக்கு தேசியக்கொடி

மேட்டுப்பாளையம்:குடியரசு தினத்தை முன்னிட்டு, வீடுகளில் கொடி ஏற்ற, பள்ளி மாணவர்களுக்கு தேசியக்கொடிகள் வழங்கப்பட்டன.காரமடை ஊராட்சி ஒன்றியம், ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, அனைத்து மாணவர்கள் வீடுகளிலும் கொடி ஏற்றி மகிழ, ஒவ்வொரு மாணவர்களுக்கும் தேசியக்கொடி வழங்கும் விழா, பள்ளியில் நடந்தது.விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை புனித செல்வி தலைமை வகித்தார். நகராட்சி ஊழியர் ஜெயராமன், மாணவர்களுக்கு தேசிய கொடிகளை வழங்கினார். இவ்விழாவில் சமூக ஆர்வலர்கள் காஜா மைதீன், விக்னேஷ், ஆசிரியர்கள் அமல சிந்தியா, அக்சாள் ஆகியோர் பங்கேற்றனர். ஆசிரியை உமா நன்றி கூறினார். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ