உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய பாரா தடகளம்; கோவை வீரர்கள் அபாரம் சிறந்த தடகள வீரராக மனோஜ் குமார் தேர்வு 

தேசிய பாரா தடகளம்; கோவை வீரர்கள் அபாரம் சிறந்த தடகள வீரராக மனோஜ் குமார் தேர்வு 

கோவை, : கோவாவில் நடந்த தேசிய அளவிலான பாரா தடகளப்போட்டியில், கோவையை சேர்ந்த வீரர்கள் எட்டு தங்கம் வென்று அசத்தினர். இந்தாண்டுக்கான சிறந்த தடகள வீரர்கள் பட்டத்தை, மனோஜ் குமார் வென்றார்.இந்திய பாராஒலிம்பிக்ஸ் சங்கத்தின், 22வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், 'சர்வதேச பர்ப்பிள் பெஸ்ட் 2024' நிகழ்வின் ஒரு பகுதியாக கோவா, ஜி.எம்.சி., ஸ்டேடியத்தில் நடந்தது. இதில், நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். அனைத்து விதமான பாரா தடகளப்போட்டிகளும் நடத்தப்பட்டன. தமிழக அணி சார்பில், கோவை மாவட்டத்தை சேர்ந்த சாந்தகுமார், பிரகதீஸ்வர ராஜா, முத்துராஜா, மனோஜ் குமார், கீர்த்திகா ஆகியோர் பங்கேற்றனர். இதன், எப்.55 பிரிவில் போட்டியிட்ட முத்துராஜா குண்டு எறிதல் (10.93மீ.,) மற்றும் வட்டு எறிதல் (34.91மீ.,) போட்டிகளில் தங்கம் வென்றார்.எப். 53 பிரிவில் பங்கேற்ற கீர்த்திகா குண்டு எறிதல் (4.63மீ.,), ஈட்டி எறிதல் (9.30மீ.,) மற்றும் வட்டு எறிதல் (11.22மீ.,) ஆகிய போட்டிகளில் தங்கம் வென்றார்.எப். 54 பிரிவில் பங்கேற்ற மனோஜ் குமார் 100மீ., (15.78 விநாடிகள்) 400மீ., (58.44 விநாடிகள்) மற்றும் 800மீ., (2.04 நிமிடங்கள்) வீல் சேர் ரேஸ் போட்டியில் தங்கம் வென்றார். சிறந்த தடகள வீரர் என்ற பட்டத்தையும், மனோஜ் குமார் தட்டிச்சென்றார். தேசிய போட்டியில் தமிழக அணி 16 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலப்பதக்கங்கள் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டியலில், இரண்டாமிடம் பிடித்தது.வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளை, தமிழ்நாடு பாரா ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர் சந்திரசேகர், கோவை மாவட்ட பாரா ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர் ஷர்மிளா ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி