உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரி செலுத்தாதவர்களின் கட்டடம் முன் பேனர் வைத்து நுாதன வசூல்

வரி செலுத்தாதவர்களின் கட்டடம் முன் பேனர் வைத்து நுாதன வசூல்

கோவை;நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு, அடுத்த மாதம் முடிவடையும் நிலையில், அதிகத் தொகை நிலுவை வைத்துள்ளோரின் கட்டடங்கள் முன், 'பிளக்ஸ் பேனர்' வைத்து வசூல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்டவை வாயிலாக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொத்தம், ரூ.5.65 லட்சம் வரி விதிப்புதாரர்கள் உள்ள நிலையில், இன்னும் ரூ.200 கோடிக்கும் அதிகமான வரியினங்கள் வசூலிக்க வேண்டியுள்ளது.நடப்பு, 2023-24ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு, அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. வரி வசூலை தீவிரப்படுத்தும் விதமாக மார்ச், 31ம் தேதி வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.அதிக வரித்தொகை நிலுவை வைத்துள்ளவர்களின் கட்டடங்களில், குடிநீர் இணைப்பு துண்டிப்பு, 'சீல்' வைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, வரி வசூலர்கள் எச்சரிக்கை மணி அடித்து வருகின்றனர்.உச்சகட்டமாக, வரி செலுத்தாதவர்களின் குடியிருப்பு கட்டடங்கள் முன், தீவிர வசூல் நடவடிக்கை என்ற தலைப்புடன், 'இந்த கட்டடம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி நிலுவையில் உள்ளது' என்ற வாசகங்களுடன், மாநகராட்சி தரப்பில் 'பிளக்ஸ் பேனர்' வைக்கப்படுகிறது.

நிதி பற்றாக்குறை!

மாநகராட்சி வருவாய் பிரிவினர் கூறுகையில், 'மாநகராட்சிக்கு வரியினங்கள் வராததால், நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாக, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதில் சிரமம் ஏற்படுகிறது. இன்னும் பலர், நீண்டகாலமாக வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். இவர்களிடம் வசூலிக்கவே, இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விரைவில், குடிநீர் இணைப்பு துண்டிப்பு, சீல் நடவடிக்கைகள் துவங்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை