உள்ளூர் செய்திகள்

அமாவாசை சிறப்பு பூஜை

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பொள்ளாச்சி மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் ஜோதிலிங்கேஸ்வரர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதுபோன்று, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்