உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகர புதிய துணை கமிஷனர் பொறுப்பேற்பு

மாநகர புதிய துணை கமிஷனர் பொறுப்பேற்பு

கோவை;மாநகர புதிய தெற்கு துணை கமிஷனராக சரவணகுமார், பொறுப்பேற்றுக்கொண்டார்.கோவை மாநகர தெற்கு துணை கமிஷனராக, சண்முகம் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த, 7ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, திருநெல்வேலி மேற்கு துணை கமிஷனராக பணிபுரிந்து வந்த சரவணகுமார் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மாநகர தெற்கு துணை கமிஷனராக, பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, அவருக்கு போலீசார் சார்பில், அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ