| ADDED : டிச 25, 2025 05:02 AM
கோவை: ராம்நகர் சத்யமூர்த்தி ரோட்டில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் நேற்று மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சுதர்ஷன ஹோமம், மகா தீபாராதனை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை, 150 வேத பண்டிதர்களை கொண்டு மகா ருத்ர ஜெபம், ஹோமம் நடத்தப்படுகிறது. மாலை 6:15 மணியளவில் நந்தகோவிந்தம் குழுவினரின் பஜனை நடக்கிறது. 26ம் தேதி மகா சண்டி ஹோமம், மகா பூர்ணாஹுதி, மாலை 6:15 மணிக்கு கலைஞர்கள் வினயா கார்த்திக் ராஜன் மற்றும் 'காந்தாரா புகழ்' சாய் விக்னேஷ் இசை நிகழ்ச்சி நடக்கிறது . அடுத்த நாள் புருஷ சுக்த ஹோமம், ஸ்வயம்வரா பார்வதி ஹோமம், மாலை பக்தி இசை நிகழ்ச்சி, 28ம் தேதி திருவாபரண ஊர்வலம், நாம சங்கீர்த்தனம், ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. மாலையில் மூன்று கஜவீரர்கள் கொண்டு ஐயப்பன் ஊர்வலம் நடக்கிறது. வரும் 31ம் தேதி இரவு 9:00 முதல் 12:00 மணி வரை புத்தாண்டு வரவேற்பு நாம சங்கீர்த்தனம், 12:00 மணிக்கு தீபாராதனை, புத்தாண்டு வாழ்த்து, அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்த ஒரு ரூபாய் நாணயம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.