| ADDED : ஜன 02, 2026 05:14 AM
சூலூர்: புத்தாண்டு தினத்தை ஒட்டி, சூலூர் வட்டாரத்தில் உள்ள சிவாலயங்கள், பெருமாள் கோவில்கள், கிராமக் கோவில்களில் நேற்று அதிகாலை, அபிஷேக, அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. கள்ளப்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், கிட்டாம்பாளையம் பழனியாண்டவர் கோவில், அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோவில், கருமத்தம்பட்டி சென்னி யாண்டவர் கோவில், மற்றும் செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மங்கல பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. சூலூர் வட்டார சர்ச்சுகளில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நேற்று காலை, கேக் வெட்டி, நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.