மேலும் செய்திகள்
மழை சீசன் துவக்கம்; இளநீர் விலை குறைவு
21-Jul-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் கிடையாது. ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் இன்றி, 45 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 18,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, டில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் மழை பொழிவு குறைந்து, வறண்ட வானிலை நிலவுகிறது. இளநீரின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் தொடர்ந்து இளநீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதாவது, இளநீர் அறுவடை அனைத்து பகுதிகளிலும் சுறுசுறுப்பாக முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேங்காய் விலையும் ஒரு டன் 70 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் விற்பனையாவதால், இளநீரை குறைந்த விலைக்கு விற்கத் தேவையில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
21-Jul-2025