உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழை பொழிவு குறைந்ததால் இயல்பு நிலை திரும்பியது

மழை பொழிவு குறைந்ததால் இயல்பு நிலை திரும்பியது

வால்பாறை; வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்ததால், மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது.வால்பாறையில் கடந்த, இரு வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. காற்றுடன் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. இடைவிடாமல் பெய்த கனமழையினால், வால்பாறையில் உள்ள பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை பொழிவு படிப்படியாக குறைந்து, சாரல்மழை பெய்கிறது. இதனால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.தற்போது, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 101.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1161 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 722 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது. அதிகபட்சமாக மேல்நீராறில், 7 மி.மீ., மழையளவு பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை