உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்

ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்

கோவை : கோவையில், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள 'ரிசர்வ் சைட்'டுகளை மீட்க, நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, நகரமைப்பு பிரிவினருக்கு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுரை வழங்கியிருக்கிறார்.கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீட்டு இடங்கள் (ரிசர்வ் சைட்), பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன.இதற்கு முன் பணிபுரிந்த கமிஷனர்கள், அவற்றை மீட்டு, 'பென்சிங்' போடுவதற்கும், 'மாநகராட்சி ஆணையாளர்' பெயருக்கு பத்திரப்பதிவு செய்யவும் நடவடிக்கை எடுத்தனர். அப்போது, ஆய்வு பணி மட்டும் நடந்தது. கமிஷனர்கள் இட மாறுதல் செய்யப்பட்டதும், அப்பணி கிடப்பில் போடப்பட்டது.மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களுக்கு, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. பல இடங்களில், 'ரிசர்வ் சைட்'டுகள் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன.இதுதொடர்பாக, நேற்றைய தினம் நமது நாளிதழில் செய்தியாக வெளியிடப்பட்டது. இதுகுறித்து துரித நடவடிக்கை எடுக்க, நகரமைப்பு பிரிவினருக்கு, தற்போதைய மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் குமார் கூறுகையில், ''மாநகராட்சி முழுவதும் மண்டலம் வாரியாக உள்ள 'ரிசர்வ் சைட்' பட்டியலை, மாநகராட்சி கமிஷனர் கேட்டுள்ளார். ஆக்கிரமிப்பில் இருந்தால் நோட்டீஸ் வினியோகித்து, மீட்பதற்கு அறிவுறுத்தியுள்ளார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ