உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  விளைநிலங்கள் அருகே ஆயில் பேரலால் பரபரப்பு

 விளைநிலங்கள் அருகே ஆயில் பேரலால் பரபரப்பு

நெகமம்: நெகமம், கபினிபாளையத்தில் விளை நிலங்கள் அருகே நூற்றுகணக்கான பழைய ஆயில் பேரல்கள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெகமம், கபினிபாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த, 6 மாதங்களாக, பழைய ஆயில் நிரப்பப்பட்ட நூற்றுக்கணக்கான பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை கண்ட அப்குதி மக்கள், இந்த ஆயில் பேரல்களால் துர்நாற்றம் ஏற்படுவதாகவும், சுற்று வட்டாரத்தில் உள்ள விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், போலீசார் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்தை போலீசார் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பேரல்களில் பைக்குக்கு பயன்படுத்தும் பழைய இன்ஜின் ஆயில் இருப்பதும், அதை செங்கல் சூலையில் விறகு எரிய பயன்படுத்துவதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து, நிலத்தின் உரிமையாளரிடம் விரைவில் ஆயில் பேரல்களை அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்