உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சா, கத்தியுடன் ஒருவர் கைது

கஞ்சா, கத்தியுடன் ஒருவர் கைது

போத்தனூர்; கோவை கரும்புக்கடை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ. ஜோஸப் , போலீசாருடன் அண்ணா காலனி சந்திப்பில் ரோந்து சென்றார். சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நால்வரிடம் விசாரிக்க முற்பட்டபோது, மூவர் ஓடிவிட்டனர். சிக்கிய ஒருவரிடம் விசாரித்தபோது, கரும்புக்கடை, சவுகார் நகரை சேர்ந்த தவுபிக், 27 என்பதும், தப்பியது ரியாஸ், காசிம், ஜியாவுதீன் எனவும் தெரிந்தது. தவுபிக் 450 கிராம் கஞ்சா, நான்கு பாலிதீன் பண்டல்கள், எடை பார்க்கும் இயந்திரம் மற்றும் பட்டா கத்தி வைத்திருந்தார். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தவுபிக்கை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை