தொண்டாமுத்துார் வட்டாரத்தில் வெங்காயம் அறுவடை துவக்கம்
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், வைகாசி பட்டத்தில் சாகுபடி சின்ன வெங்காயத்தை, அறுவடை செய்யும் பணி துவங்கியுள்ளது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும், 20,000 ஏக்கர் பரப்பளவில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தாண்டு, வைகாசி பட்டத்தில், 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்தனர். தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காயத்தை, அறுவடை செய்யும் பணி, நடந்து வருகிறது. விவசாயிகள் கூறுகையில், 'வைகாசி பட்டத்தில், 60 நாள் பயிரான சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, சின்ன வெங்காயம் அறுவடைக்கு தயாராக உள்ளது. தற்போது, அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக, வெயில், மழை என காலநிலை மாறி, மாறி வந்ததால், விளைச்சல் குறைந்துள்ளது. தற்போது, அறுவடை செய்த வெங்காயத்தை, பட்டறையில் அடைத்து, சேமிக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும், ஒரு மாதத்துக்கு பின், நல்ல விலை கிடைத்தால், விற்பனை செய்வோம்' என்றனர்.