உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்கள் பயன்பாட்டிற்கு எஸ்கலேட்டர் திறப்பு

மக்கள் பயன்பாட்டிற்கு எஸ்கலேட்டர் திறப்பு

பாலக்காடு:பாலக்காடு நகர வளர்ச்சியின் ஒரு பகுதியாக, ஜி.பி.,ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள, நகரும் படிக்கட்டை (எஸ்கலேட்டர்) மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் திறந்து வைத்தார்.கேரள மாநிலம், பாலக்காடு ஜி.பி., ரோட்டில், 2018ல் ரயில் பாதையை கடக்க, மத்திய அரசின் அமிர்த் திட்டத்தில், ஆறு கோடி ரூபாய் செலவில், இரு பக்கத்தில் இருந்தும் ஒரே நேரத்தில் ஏறி, இறங்கும் வகையில், நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) அமைக்கும் பணி துவங்கியது.கொரோனா காலத்தின் போது, பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. அதன்பின், பணிகள் வேகமடைந்து, தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், நேற்று, மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எஸ்கலேட்டரை திறந்து வைத்தார்.நகராட்சி தலைவர் பிரமீளா தலைமை வகித்தார். எம்.பி., ஸ்ரீகண்டன், நகராட்சி துணைத் தலைவர் கிருஷ்ணதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை