| ADDED : டிச 31, 2025 05:11 AM
அன்னூர்: அன்னூர், கரிவரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நேற்று நடந்தது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதர கரி வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக பூஜை நடந்தது. காலை 4:30 மணிக்கு பெருமாளுக்கு அலங்கார பூஜை நடந்தது. காலை 5:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக, கரி வரதராஜ பெருமாள் வந்து அருள் பாலித்தார். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பெருமாளை சேவித்து கோஷம் எழுப்பினர். கரி வரதராஜ பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா அமைப்பாளர் ராமசாமி, அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் உள்பட பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.