உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண் பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பு

மண் பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பு

அன்னுார்; அன்னுார் வட்டார வேளாண் அலுவலகத்தில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க துவக்க விழா நடந்தது. கோவை கலெக்டர் பவன் குமார், விவசாயிகளுக்கு, பயறு வகைகள், காய்கறி பழச்செடி தொகுப்புகளை வழங்கினார்.வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி பேசுகையில், கோவை மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் செயல்படுகிறது. அன்னுார் வட்டாரத்தில் இன்று (10ம் தேதி) மசக்கவுண்டன் செட்டிபாளையம், 15ம் தேதி காட்டம்பட்டி, 16ம் தேதி வடக்கலூர், 17ம் தேதி கணுவக்கரையிலும் மண் பரிசோதனை செய்யப்பட உள்ளது. விவசாயிகள், தங்களுக்கு அருகாமையில் உள்ள ஊருக்குச் மண்ணை எடுத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம், என்றார். வேளாண் உதவி இயக்குனர் பிந்து பேசுகையில், விவசாயிகள் மற்றும் வீட்டுத் தோட்டம் அமைக்க வசதி உள்ள பொதுமக்கள், உழவன் செயலி அல்லது தமிழ்நாடு வேளாண்துறை இணையதளம் அல்லது வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இத்திட்டத்தில் பயன்பெறலாம், என்றார். வேளாண் துணை இயக்குனர் ஆனந்தகுமார், தோட்டக்கலை துணை இயக்குனர் சித்தார்த்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை