உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துாரிகைகளின் மொழி பேசிய ஓவியங்கள்!

துாரிகைகளின் மொழி பேசிய ஓவியங்கள்!

கோவை:கோவை விழாவின் ஒரு பகுதியாக, கோவை ரேஸ்கோர்ஸ் திட்டச்சாலையில், ஓவியச்சந்தை நிகழ்ச்சி நேற்று துவங்கியது.பல்வேறு வகையிலான ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தாமிரத்தால் ஆன, பட்டாம்பூச்சிகளும், பள்ளி மாணவர்கள், நேதன், நீல் ஆகியோரின் ஓவியங்களும் பார்வையாளர்களை நகரவிடவில்லை. இதுதவிர, மாற்றுத்திறனாளிகளின் கைவண்ணத்தில் வரையப்பட்ட மண்டலா ஓவியங்கள், பைகள், கலை தயாரிப்புகள் அனைவரையும் கவர்கின்றன. இப்படி தெரு முழுவதும் பல வண்ணங்களில் ஓவியங்கள் நிறைந்துள்ளன.கண்காட்சி இன்று நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ